சென்னை: தெலுங்குத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. டோலிவுட் சினிமாவின் பிரின்ஸ் என ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான மகேஷ் பாபு, தனது 4வது வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். சென்னை லயோலா கால்லூரி மாணவரான இவர், 1999ல் வெளியான ராஜகுமாருடு படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அப்போது முதல் டோலிவுட்டின் மோஸ்ட் ஸ்டைலிஷ் நடிகராக வலம் வருகிறார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபு கேரியரில் ஒக்கடு, போக்கிரி, கலேஜா, பிஸ்னஸ்மேன், சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு, மஹரிஷி, அதிதி, ஸ்ரீமந்துடு, சர்குவாரி பட்டா, குண்டூர் காரம் ஆகிய படங்கள் மாஸ் காட்டின. தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலியுடன் இணைந்துள்ள மகேஷ் பாபு SSMB29 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். SSMB29 படத்தின் டைட்டில் இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், SSMB29 படத்துக்காக மகேஷ்பாபு 130 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் மகேஷ் பாபுவும் முக்கியமானவர். சினிமா தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வரும் மகேஷ்பாபு, அதற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதுதவிர ஐதராபாத்தில் AMD சினிமாஸ் என்ற பெயரில் அதிநவீன மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை சொந்தமாக வைத்துள்ளார் மகேஷ் பாபு.
மேலும் படிக்க - ஐமேக்ஸில் வெளியாகும் விஜய்யின் கோட்
மேலும், AN என்ற பெயரில் Restaurant நடத்தி வரும் மகேஷ் பாபு, ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளாராம். இவைகள் மூலம் மாதம் 20 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் மகேஷ் பாபு, ஆண்டுக்கு 150 முதல் 200 கோடி வரை டர்ன் ஓவர் செய்கிறாராம். அதேபோல், மிகப் பெரிய பண்ணைத் தோட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான பங்களா, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நீச்சல் குளத்துடன் சொகுசு பங்களா உள்ளதாம். இவைகளின் மதிப்பு மட்டுமே 50 கோடிக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது.
அதேபோல், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் மகேஷ் பாபுவுக்கு சொந்தமாக பிளாட்கள் உள்ளன. மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ், Audi e-Tron, BMW X6, Mercedes-Benz S-Class, Lexus LX570 ஆகிய கார்களும் மகேஷ் பாபுவின் பங்களாவில் வரிசை கட்டி நிற்கின்றன. இவைகளின் மதிப்பே பல கோடிகள் இருக்கும், இதுதவிர மினி ஜெட் விமானம், கேரவன் ஆகியவற்றையும் சொந்தமாக வாங்கியுள்ளார் மகேஷ் பாபு.
ஆகமொத்தம் இவையனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு 400 முதல் 500 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டோலிவு பிரின்ஸ் என்ற அடைமொழிக்கு ஏற்ப, நிஜமாகவே இளவரசனாக வாழ்ந்து வருகிறார் மகேஷ் பாபு. இவருக்கு நம்ரதா ஷிரோத்கர் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.