இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா தன் தந்தை போன்று பெரிய இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் முன்னணி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்துள்ளார்.
இதையடுத்து, பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து, பல படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ‘அன்னக்கொடி’ திரைப்படத்தில் மனோஜ் பாரதிராஜாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை மனோஜ் பாரதிராஜா நிறைவேற்றினார். முற்றிலும் புது முகங்களுடன் உருவான இந்த படத்தில் மனோஜ் பாரதிராஜாவின் தந்தை பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இருதய பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் இரங்கல்
இந்நிலையில், மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜாவிற்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2025
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்…