சினிமா

'குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? மாஸான தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

'குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? மாஸான தகவல்
'குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? மாஸான தகவல்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தில் திரிஷா, ரெடின் கிங்ஸ்லி, பிரசன்னா, யோகிபாபு, பிரியா வாரியர், சிம்ரன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால் நொடிக்கு நொடி அஜித்தின் ரசிகனாகவே இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை முற்றிலும் ஒரு Fan Boy-யின் சம்பவம் என ரசிகர்கள் கொண்டாடினர்.

வசூல் வேட்டை

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சமீபத்தில் இப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தார். இதையடுத்து, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஓடிடி தகவல்

இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் மே 8-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.