தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது மாநிலத்தின் முக்கியப் பொறுப்பான உள்துறைச் செயலாளரையும் மாற்றியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எவ்விதப் புகாருமின்றி, சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் நோக்கில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார் ஐஏஎஸ் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகப் புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக ரீதியிலான அதிரடி நகர்வுகள்
ஏற்கனவே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் நியமிக்கப்பட்டார். அதேபோல், டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரும் மாற்றப்பட்ட நிலையில், தற்போது உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மணிவாசன், இன்று மாலை 5 மணிக்குள் பொறுப்பேற்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

LIVE 24 X 7