கடந்த 2023-ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி, அட்டப்பாடியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் ரஜினி அங்கு உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
ரஜினியை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேலைகளிலும் ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ரிசார்ட் முன்பு குவிந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்கு கிளம்பிய ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்து கும்பிடு போட்டார். இதனை தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்து விட்டு அங்கு இருந்து சூட்டிங் கிளம்பி சென்றார்.
ரஜினி வாழ்த்து
இப்படி ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு நேரில் சென்று புதுமண தம்பதிகளான அவரது மகன் விஜய் விகாஷ் - தீக்ஷனா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால் ரஜினி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.