TN Govt New Scheme : “தனது துறை குறித்த புரிதல் உதயநிதிக்கு இருக்கிறதா?” - அண்ணாமலை கேள்வி

Annamalai Slams Udhayanidhi Stalin on TN Govt New Scheme : ‘தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – 2024’ திட்டத்தில் சில மாற்றங்கள் தேவைப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aug 6, 2024 - 12:49
Aug 6, 2024 - 13:34
 0
TN Govt New Scheme : “தனது துறை குறித்த புரிதல் உதயநிதிக்கு இருக்கிறதா?” - அண்ணாமலை கேள்வி
Annamalai Slams Udhayanidhi Stalin on TN Govt New Scheme

Annamalai Slams Udhayanidhi Stalin on TN Govt New Scheme : உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடப்பாண்டிற்கான ‘தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – 2024’-ல் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டிகள் மாவட்ட/ மண்டல/ மாநில அளவில் நடைபெறவுள்ளது. 

இதன் மொத்தப் பரிசுத்தொகையாக ரு. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆக. 25ம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள வாயிலாக முன்பதிவு செய்ய அறிவுருத்தப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு எஸ்டிஏடி மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையம்: 9514 000 777.

தற்போது இந்த திட்டம் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2024-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார். அதில், பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பை, 12 முதல் 19 வயது வரை ஒரே பிரிவில் வைத்திருக்கிறார்கள். 

இது, தேசிய விளையாட்டு கூட்டமைப்பு வகுத்துள்ள வயது வரம்பு பிரிவுகளான, 11 - 14 வயது, 14 - 17 வயது, 17 - 19 வயது என்பதற்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி, 12 வயது பள்ளிச் சிறுவனை, 19 வயது சிறுவனோடு ஒரே பிரிவில் போட்டியிட வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்பது, முட்டாள்தனமும் கூட. இதனால், ஒத்த வயது போட்டியாளர்களோடு போட்டியிடும் சமவாய்ப்பின்றி இளஞ்சிறுவர்கள் ஏமாற்றமடைவதோடு, இளம் வயதிலேயே மனதளவில் தளரவும் வாய்ப்பு உள்ளது. இது விளையாட்டுத் துறையில் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.  

பள்ளி மாணவர்களை, வயது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவாக வகைப்படுத்துவதை விட்டுவிட்டு, 12 - 19 வயது வரை ஒரே பிரிவாக அறிவித்திருப்பது, உண்மையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு, தனது துறை குறித்த புரிதலோ, இந்த விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்ற தெளிவோ இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில், விளையாட்டுத் துறையின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. 

மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று என்ன பயன்?.. எடப்பாடி தாக்கு

உடனடியாக, திமுக அரசு அறிவித்திருக்கும்,  பள்ளி மாணவர்கள் 12 - 19 வயது வரை ஒரே பிரிவு என்ற அறிவிப்பை மாற்றி, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு வகுத்திருக்கும் அடிப்படையான விதிமுறையின்படி, தமிழக முதலமைச்சர் கோப்பை 2024 பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையில் சாதிக்கும் திறமையும் ஆர்வமும் கொண்ட பள்ளி மாணவர்கள் கனவினை, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சிதைத்து விட வேண்டாம் என்றும் அமைச்சர் உதயநிதியை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow