மார்ச் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம் – அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரி
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் தற்போது கள அரசியல் செய்ய தொடங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளது. மேலும் தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்,வரும் மார்ச் 18ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தொகுதி மறுவரையறை குறித்த மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் குழு ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநில முன்னாள் முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 18ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டமும், மார்ச் 22ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற உள்ளது.
What's Your Reaction?






