தீபாவளி பலகாரங்கள்னால உடல் எடை கூடும்னு பயமா? கவலையே வேணாம்.. இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணுங்க!
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் என்ற பயன் சிலருக்கு தோன்றும். இதனை தவிர்க்க சில டிப்ஸ்-களை பகிந்துள்ளார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா .

பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிகமான கலோரிகளை உட்கொள்வது வழக்கமே. தின்பண்டங்கள், இனிப்புகள் மற்றும் பிற நொறுக்கு தீணி ஆகியவற்றை பார்த்த பின், நம்முடைய நாக்கை கட்டுப்படுத்துவது என்பது கடினமாகிறது. இந்த சுவையான உணவுகளை உட்கொள்வதால் அது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
பண்டிகைக் காலங்களில் இப்படி உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க, நீங்கள் என்ன, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிப்பது அவசியம். இதுகுறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். பகிரப்பட்ட வீடியோவில், லோவ்னீத் கூறுகிறார், “பண்டிகைக் காலங்களில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் கடினமான இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மூன்று விஷயங்களை செய்தால் இதை சுலபமாக்கலாம். முதலில், நாளை ஒரு லிட்டர் தண்ணீர் அருந்தி ஆரம்பித்து, நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைப் பருகுவதை உறுதி செய்யவேண்டும்”
https://www.instagram.com/p/DBGts_fSxfF/
“இரண்டாவது நார்ச்சத்து, நான் வீட்டை விட்டு வெளியேறும் முன் காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் கட்டி எடுத்துச்செல்லும் பழக்கம் எனக்கிருக்கிறது. மேலும் காலை உணவுக்கு, நான் ஒரு கிண்ணம் அளவிற்கு பயிர்வகைகளை சாப்பிடுவேன். இதை தவிர, நான் நாள் முழுவதும் மோர் பருகிக்கொண்டே இருப்பேன். மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த கொழுப்புள்ள பனீரை சாப்பிடுவேன்” என்றார் லவ்நீத் பத்ரா.
இந்த வீடியோவிற்கு கீழ் அவர் பகிர்ந்துள்ள பதிவில், "பண்டிகைக் கால கொண்டாட்டங்களில் நிச்சயமாக சுவையான உணவுகளை நம்மால் நிராகரிக்க முடியாது. டயடிற்க்க நமது பாரம்பரிய பண்டிகை உணவை நாம் முற்றிலும் தவிர்க்கிறோம் என்று அர்த்தமா? இல்லை. பண்டிகைக்கு பின் டயட் மேற்கொள்வதற்கு பதிலாக, பண்டிகை சமயத்தின் போதே நம் உணவுப் பழக்கங்களை நாம் டிராக் செய்யலாம்”
மேலும் படிக்க: ”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்
”இந்த மூன்று எளிய குறிப்புகள் மூலம் ஒருவர் தங்கள் பண்டிகை உணவை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி சாப்பிட முடியும். அடிக்கடி பசிக்காமல் இருக்க நார்சத்து உணவுகளை கொண்டு உங்கள் வயிற்றை நிறப்புங்கள். பின்னர், நீங்கள் உட்கொள்ளும் இனிப்பு வகையுடன் சேர்த்து சிறிது புரதம் மற்றும் கொழுப்பு அடங்கிய உணவை சேர்க்கலாம். மேலும், இனிப்புகளில் சிறிது எலுமிச்சை சாரை சேர்த்துக்கொள்ளலாம். அது அந்த இனிப்பில் உள்ள குளுக்கோஸ் ஸ்பைக்கைக் குறைக்க உதவுகிறது” என்று லவ்னீத் கூறுகிறார்.
எது எப்படியோ, பல டிப்ஸ்களை நாம் இணையத்தில் தேடி தேடி பார்த்தாலும், ’அளவுக்கு மீறினால் அமிர்தமும், விஷம்’ என்ற கருத்தை நினைவில் கொண்டு எல்லா உணவுகளையும் அளவாக சாப்பிடுவதே சிறப்பு.
What's Your Reaction?






