துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க... நடிகை ஊர்வசி அட்வைஸ்

சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

Aug 28, 2024 - 12:41
Aug 29, 2024 - 10:23
 0
துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க... நடிகை ஊர்வசி அட்வைஸ்
நடிகை ஊர்வசி அட்வைஸ்

திரைத்துறையில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஷூட்டிங்கின்போது நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் நடிகைகள் குமுறி வருகின்றனர். அதுவும் திரைத்துறையில் ஆண் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதாகவும் புகார்களை அடுக்கி வைக்கின்றனர். 

அதிலும் குறிப்பாக மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல்கள் உச்சத்தில் இருப்பதாக நடிகைகள் பலர் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த கமிட்டி பல நடிகைகளிடம் விசாரணை நடத்தி கடந்த 2019ம் ஆண்டு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகளாக வெளியாகாத இந்த அறிக்கைகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க: தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.... சோகத்தில் நகைப் பிரியர்கள்.. எப்போது குறையும்?

இதுதொடர்பாக அண்மையில் பேசிய நடிகை ஊர்வசி, “மலையாள திரையுலகில் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும், திரையுலகை தாண்டி அலுவலங்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் தொல்லை பிரச்சனை நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மலையாள நடிகைகள் ரொம்பவே போல்டானவங்க. நாம் சந்தித்த பிரச்சனையை இனிமேல் எந்த பெண்களும் சந்திக்க கூடாது என்றே முன்வந்து வாய் திறந்து சொல்லியிருக்காங்க. மேலும், இதுபோன்ற பாலியல் தொல்லை நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிக் கொண்டு சினிமா ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும். பெண்கள் தனியாக சினிமா வாய்ப்புத் தேடி சென்றால், இதுபோன்ற சிக்கல்கல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நான் நடிக்க வந்த காலத்திலேயே சீனியர் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்தெல்லாம் பேசியிருக்காங்க” என தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow