தனுஷ், சிவகார்த்திகேயன் மீட்டிங் எங்க நடந்ததுன்னு தெரியுமா... சீக்கிரமே குட் நியூஸ்..?

கொட்டுக்காளி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷை அட்டாக் செய்வது போல பேசியிருந்தார் சிவகார்த்திகேயன். அது சர்ச்சையான நிலையில், தனுஷும் சிவகார்த்திகேயனும் திடீரென சந்தித்துகொண்டு தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Aug 27, 2024 - 02:05
 0
தனுஷ், சிவகார்த்திகேயன் மீட்டிங் எங்க நடந்ததுன்னு தெரியுமா... சீக்கிரமே குட் நியூஸ்..?
தனுஷ் - சிவகார்த்திகேயன் சந்திப்பு

சென்னை: சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் கிடையாது. இதற்கு எடுத்துக்காட்டாக கோலிவுட்டில் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி - கமல், விஜய் – அஜித் என கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கும் ஒரு இடம் உள்ளது. முக்கியமாக சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலங்களில், அவருக்கு தனுஷும் சப்போர்ட் செய்திருந்தார். தனது 3 படத்தில் சிவகார்த்திகேயனை காமெடி ரோலில் நடிக்க வைத்த தனுஷ், எதிர் நீச்சல் என்ற படம் தயாரித்து அதில் சிவாவை ஹீரோவாக்கி அழகுப் பார்த்தார்.

ஆனால், அதன்பின்னர் இக்கூட்டணியில் பிரச்சினை வர, அதன்பின்னர் தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக்கொள்வதோ சந்தித்துகொள்வதோ கிடையாது. இந்த நிலையில் தான், சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையானது. அதாவது “சினிமாவில் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதால், நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன், நான் தான் ரெடி பண்ணேன் என எதுவும் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னையும் அப்படி சொல்லி சொல்லி பழக்கிவிட்டாங்க. ஆனால் அந்த மாதிரியெல்லாம் நான் கிடையாது” எனக் கூறியிருந்தார். 

இது தனுஷை மறைமுகமாக அட்டாக் செய்வது போல் உள்ளது என சிவகார்த்திகேயன் ரசிகர்களே கூறியிருந்தனர். ஒருசில மேடைகளில் சிவகார்த்திகேயன் குறித்தும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது பற்றியும் தனுஷ் பேசியிருந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து தான் சிவகார்த்திகேயன் அப்படி பேசியதாக சொல்லப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் - தனுஷ் இடையேயான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் நேர்மாறாக தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக இருக்கும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் அடுத்தடுத்து நின்றுகொண்டிருக்க, அவர்களது சைடில் இருந்து இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் துபாயில் நடந்ததாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவருமே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அப்போது தனுஷும் சிவாவும் பழையபடி சிரித்து பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்தவர்களில் இயக்குநர்கள் பாண்டிராஜ், எழில், நடிகர் தனுஷ் மிக முக்கியமானவர்கள் என்பதாக பேசியிருந்தார். கொடுக்காளி ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்குப் பின்னரே சிவா இவ்வாறு பேசியிருந்தார்.

மேலும் படிக்க - விஜய்-அஜித் கூட்டணியில் மங்காத்தா 2..?

அந்நிகழ்ச்சி நடைபெற்று சில தினங்களிலேயே சிவாவும் தனுஷும் துபாயில் சந்தித்துள்ளனர். இதனால் விரைவில் இவர்கள் இருவரிடம் இருந்து ஏதேனும் க்யூட் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தாண்டு பொங்கல் தினத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் படமும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லரும் ஒன்றாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow