Black tiger is coming.. பட்டையை கிளப்பும் 'சர்தார் 2' டீசர்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். தொடர்ந்து, ‘ஹீரோ’, ‘சர்தார்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சர்தார் 2 டீசர்
'சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று (மார்ச் 31) காலை வெளியானது. கண்ணில் கொலைவெறியுடன் கையில் கத்தியுடன் கார்த்தி இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரில் ‘Black tiger is coming' போன்ற உணர்ச்சிகரமான வசனங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்குவதுடன் பான் இந்தியா திருவிழாவிற்கு தயாராகுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
The faceoff begins ⚔️#Sardar2 Prologue ▶️ https://t.co/iZSuRXv4HV@Karthi_Offl @Prince_Pictures @ivyofficial2023 @Psmithran @iam_SJSuryah @lakku76 @venkatavmedia @RajaS_official @B4UMotionPics @MalavikaM_ @AshikaRanganath @rajishavijayan @iYogiBabu @SamCSmusic @george_dop… pic.twitter.com/JYJsaQLKYe — Prince Pictures (@Prince_Pictures) March 31, 2025
What's Your Reaction?






