Rajini: வெங்கட் பிரபுவுடன் இணையும் ரஜினிகாந்த்... விஜய்யின் கோட் படத்தை பாராட்ட இதுதான் காரணமா..?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம், கடந்த 10ம் தேதி ரிலீஸானது. தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. வேட்டையனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதனிடையே உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர், நாளை முதல் சென்னையில் தொடங்கும் கூலி படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்கவுள்ளார். சென்னையில் நடைபெறும் இந்த படப்பிடிப்புக்கு பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்த கோட் செப்.5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் போனில் பேசி பாராட்டுத் தெரிவித்திருந்தார். அதனை தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த வெங்கட் பிரபு, கோட் பார்த்துவிட்டு படம் பற்றி மனம் திறந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி, உங்களுக்கு எனது அன்பு என ரஜினிகாந்த் பெயரை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். முன்னதாக ரஜினியின் வேட்டையன் படத்தை விஜய்யுடன் சேர்ந்து பார்த்ததாக வெங்கட் பிரபு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் ரஜினிகாந்த் – வெங்கட் பிரபு கூட்டணி விரைவில் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியும் வெங்கட் பிரபும் இணையும் இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஏற்கனவே இந்தியன் 3, வேட்டையன் படங்களின் தோல்வியால் லைகா தயாரிக்கும் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பது சந்தேகமாக உள்ளது. ரஜினி – வெங்கட் பிரபு கூட்டணி இணையும் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் வைரலாகி வருகின்றன.
கோட் ரிலீஸுக்குப் பின்னர் சிவகார்த்திகேயனுக்காக வெங்கட் பிரபு ஒரு ஸ்க்ரிப்ட் ரெட் செய்துள்ளதாகவும், சீக்கிரமே அந்தப் படம் பற்றி அறிவிப்பு வரும் என்றும் சொல்லப்பட்டது. அதேபோல், ரஜினியும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2ம் பாகத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கம் மாரி செல்வராஜ், மணிரத்னம் ஆகியோரும் ரஜினிக்கு ஸ்க்ரிப்ட் வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வரிசையில் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார்.
அதேநேரம் ரஜினி – வெங்கட் பிரபு கூட்டணி இணைந்தால், அந்தப் படம் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே ஃபயர் விட்டு வருகின்றனர். ஆனாலும் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும், அதுவே எனது கனவு இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?