K U M U D A M   N E W S

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

திருச்சி மண் ஒரு திருப்புமுனையாக அமையும் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் விஜய்: திருச்சியிலிருந்து 'மக்களுடன் சந்திப்பு'!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.