தமிழ்நாட்டில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் Ford?
அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் மாயமான 4 மாணவிகளை போலீசார் 4 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதை பொருட்கள் புழக்கம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளில் 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 2,098 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
Highcourt comments on Drug Trafficking: தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறை சமர்பித்துள்ள அறிக்கையில் திருப்தியில்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து.
L Murugan Press Meet: தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்தும், தவெக மாநாடு குறித்தும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
Caste wise Census in India:சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என ஆந்திரா அரசு RTI மூலம் தகவல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசுமீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.
Dharmendra pradhan to MK Stalin: புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ் உட்பட தாய்மொழியில் கல்வி கற்பதை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறாரா என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி.
Gutka Case Update: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகினர்.
Monkey Box: குரங்கம்மை தொற்று பரவல் எதிரொலியாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
Tamilnadu Housing Board: போதைக் கூடாரமாகும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. போதை ஊசி போட்டப்படி இளைஞர்கள் செய்யும் அலப்பறைகள்.
எல்லா பண்டிகைகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துச் சொல்லும் நடிகரும் தவெக தலைவருமான விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது பாஜக.
''அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?'' என்று சீமான் கூறியுள்ளார்.
வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.