K U M U D A M   N E W S

Tamil Nadu Government

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

குண்டர் சட்டம்... தேவையான சட்டத் திருத்தம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுத்தல்!

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பிற்போக்கு கருத்துகளை கேள்வி கேளுங்கள் - மேடையில் விளாசிய அன்பில் மகேஷ்

கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

Dengue Fever : டெங்கு காய்ச்சல்.. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

Breaking: தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அதிரடி... மேலும் 32 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.