K U M U D A M   N E W S
Kumudam Ad

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்.. பின்னணியில் பாஜக உள்ளது: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் 3 அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'நான் சாகப்போகிறேன்'.. ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!

ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு

"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னையில் ஒரே QR பயணச்சீட்டு வசதி! 'CHENNAI ONE' செயலியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: இன்று முதல் அமல் -அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு

மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - செபி அறிவிப்பு!

அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி தெரிவித்துள்ளது. விசாரணையில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.