பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.