K U M U D A M   N E W S
Kumudam Ad

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு

கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

AUS vs SA : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்னிச்சிடுங்க தலைவரே.. அமைச்சருக்கு பணமாலை: மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.

18 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில்?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை குறி வைத்து அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்தினை செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் மீது ரப்பர் தோட்டாவினால் சூப்பாக்கி சுடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய இராணுவத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியேற்ற கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கவின் நியூசம் டிரம்புக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

கோவாவில் பரபரப்பு: மன்னிப்பு கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.. நிராகரித்த அரசு மருத்துவர்!

கோவாவில் சுகாதாரத்துறை அமைச்சரின் 'ஸ்டுடியோ மன்னிப்பை' நிராகரித்துள்ளார் அரசு மருத்துவர். தான் அவமானப்படுத்தப்பட்ட அதே மருத்துவமனையில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்குள் புகுந்த உடும்பு.. மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளிக்குள் உடும்பு நுழைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பசுவின் வாயில் சிக்கிய சொம்பு.. வைரல் வீடியோ

காஞ்சிபுரம் அருகே பசு மாட்டின் வாயில் மாட்டிக் கொண்ட சொம்பை இளைஞர்கள் போராடி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.