K U M U D A M   N E W S

rd

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரிசையில் மிதுன் சக்கரவர்த்தி... தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணி! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.

கோடநாடு வழக்கு – இருவருக்கு சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் கோயில் பூசாரி மற்றும் வங்கி மேலாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பிரச்னை... ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். 

IPL 2025 : ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா மும்பை இண்டியன்ஸ்?.. மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?

IPL 2025 - Hardik Pandya in Mumbai Indians : 2025ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இறுகும் அமலாக்கத் துறையின் பிடி.. அமைச்சரின் சொத்து விவரங்களை கேட்டு கடிதம்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள்கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

கண்டெய்னரில் பணம் கடத்தல்.. கொள்ளையர்களின் திட்டம் என்ன? - அதிர்ச்சி வாக்குமூலம்

ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.