K U M U D A M   N E W S

டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து: எலான் மஸ்க் புறக்கணிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.

16 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அன்புமணிக்கு கெடு.. ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.

"விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும்" - ஒ.பி.எஸ் | TVK leader | Kumudam News

"விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும்" - ஒ.பி.எஸ் | TVK leader | Kumudam News

பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தவெக மதுரை மாநாடு: அம்மாவின் அன்பு முத்தம்.. புதிய எண்ட்ரி சாங்.. ரேம்ப் வாக்கில் விஜய் செல்ஃபி!

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.

எதுக்கு புஸ்ஸி போட்டோ? ஸ்டிக்கரை மறைத்த தவெக.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்' என தவெகவினர் ஒவ்வொரு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி வந்த நிலையில், விஜயின் முகம் மட்டுமே அதில் இருக்க வேண்டும் என கட்சி தலைமையிடமிருந்து உத்தரவு பிறந்துள்ளது.

2026-ல் கூட்டணி ஆட்சி.. புதிய தமிழகம் கட்சிக்கு பங்கு: கிருஷ்ணசாமி சூளுரை!

"2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். புதிய தமிழகம் கட்சிக்கு அதில் பங்கு உண்டு" என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியலில் அண்ணாமலை.. உதயநிதியின் முடிவால் உதறல் எடுக்கும் சீனியர்கள்! | Kumudam News

வாரிசு அரசியலில் அண்ணாமலை.. உதயநிதியின் முடிவால் உதறல் எடுக்கும் சீனியர்கள்! | Kumudam News

கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News

கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலி: அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியல் கட்சி தொடங்கிய எலான் மஸ்க் .. எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் எக்ஸ்பேஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், அரசியலிலும் தனது புதிய அரசியல் பாதையை வகுக்கத் தொடங்கியுள்ளார். அவர் “America Party” (அமெரிக்கா பார்ட்டி) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தி ஸ்டிக்கர்? காங்கிரஸ் கட்சி விளக்கம்

கடந்து இரண்டு நாட்களாகவே காங்கிரஸ் கட்சி பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக, பீகாரில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானெல்லாம் ஜெயிப்பேனு யாரும் சொன்னதில்லை.. கருத்துக் கணிப்பு குறித்து செந்தில் பாலாஜி!

”கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுள்ளது. கொங்கு மண்டல வெற்றிக்கான ரகசியம் தேர்தல் முடிவில் வெளியாகும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினை சீண்ட வேண்டாம்: திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

பாஜகவிடம் நீதிபதி அணி.. வேண்டுகிற தீர்ப்பு கிடைக்கும்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

"பாஜக நீதிபதி அணியை உருவாக்கி, தங்களுக்குத் தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் சாதித்துக் கொள்கிறது" என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

விசிக பிரமுகர் படுகொலை... போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு

திருவண்ணாமலை அருகே விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விசிகவினர் மற்றும் உறவினார்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு | Political Party Flagpole Issue | AIADMK | DMK

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு | Political Party Flagpole Issue | AIADMK | DMK

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த முறை முதல்வர் காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை.. ஆர்.பி.உதயகுமார் அட்டாக்

தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.