போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..
சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாமக்கலில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.
கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். மேலும் கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக போலீஸார் தரப்பில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரேபிடோ ஓட்டுநரின் ஜிபேயில் இருந்த பணத்தை வழிப்பறி செய்த போலீசார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருப்பதி கோயில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பேசும்பொருளாகி, ஜெயம் ரவி விவகாரத்துக்கு கொஞ்சம் ஓய்வளித்தது.
இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால் போலீசார் கைது செய்த விதம் சட்டவிரோதமானது’’ என்று தெரிவித்தார்.
சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Private School Fees Hike in Chennai : சென்னை மடிப்பாக்கத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி வெளியானது.
''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.