#JUSTIN : பணம் வாங்குவதில் மருத்துவமனை ஊழியர்களிடையே தகராறு | Kumudam News 24x7
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.
Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்
சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.
Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.
18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.
தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.