#BREAKING: 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு
அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்
தமிழ்நாட்டில் 4 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமனம்
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு. 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2,950 கிலோ கஞ்சாவை செங்கல்பட்டு பகுதியில் போலீசார் தீயிட்டு அழித்தனர்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2950 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது
கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளசாராய விற்பனை தொடங்கியதால் களத்தில் இறங்கிய காவல்துறை.
தமிழகத்திற்கு வேலை தேடி வந்து பசிக்கொடுமையால் வடமாநிலத்தவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை 10 மீ. உயரம் தூக்கி சோதனை. தூக்கம் பாலத்தை முழுமையாக மேலே தூக்கி இறக்கி ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக சோதனை செய்தனர்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டம், அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
Medical College Dean Issue in Tamil Nadu : தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் டீன் இல்லாமல் செயல்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.
கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்
மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.