PM Modi: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பளித்த இந்தியர்கள்!
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது குவாட் அமைப்பு. இன்று நடக்கும் குவாட் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.
பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து. பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்
பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.
பிரதமர் மோடி அடுத்த 15 நாட்களுக்கு அடித்தட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் - அமித்ஷா தகவல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து. அன்பான பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து என X தளத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு
''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து. உடல்நலம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக விஜய் தனது X தளத்தில் பதிவு
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
"நான் எடுக்காத வீடியோவுக்காக அவதூறாக கட்சியை விட்டு நீக்கம்" - சதீஷ்
பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமும், நாடு முழுவதும் சுய தொழில் தொடங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
PM Modi Meets Paralympics Athletes : பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத வகையில் 29 பதக்கங்களை குவித்து நாடு திரும்பிய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.
''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர் உங்களை தாக்கி பேசுவார். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.