K U M U D A M   N E W S

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வௌவால் கடித்ததால் ஒருவர் உயிரிழப்பு: ஆஸ்திரேலியாவை உலுக்கிய அபூர்வ வைரஸ் தொற்று!

ஆஸ்திரேலியாவில் வௌவால் கடித்ததில் ரேபிஸ் போன்ற அபூர்வ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.