Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 26-10-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 26-10-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 26-10-2024
சென்னை விமான நிலையம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் கிராமத்தில் தீவன மூட்டை விழுந்து 4 மற்றும் 3 வயதுள்ள இரு குழந்தைகள் பலி.
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
சென்னை ராயப்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 35 மாணவ, மாணவிகள் பாதிப்பு.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநரை திரும்பப் பெற கோரிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை இடை நீக்கம் செய்வாரா? என தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழிசை கருத்து
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
06 மணி தலைப்புச் செய்திகள்