K U M U D A M   N E W S

Sonia Gandhi: வயநாடு இடைத் தேர்தல்... பிரியங்காவுக்கு ஆதரவாக சோனிய காந்தி, ராகுல் ரோட் ஷோ!

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

வயநாடு தேர்தலில் போட்டியா..? குஷ்பூ விளக்கம்

வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா... இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

தம்பி விஜய் உணர்ந்திருப்பார்னு நினைக்கிறேன்! தமிழசை செளந்தரராஜன் விமர்சனம்

2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா... காங்கிரஸ் கூட்டணி அபாரம்!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan : திருமாவளவனின் இந்து மத நம்பிக்கை.. அமாவாசையில் மாநாடு - தமிழிசை தாக்கு

Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை !

மகாத்மா காந்தியில் 156 வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

தமிழக மீனவர்கள் பிரச்னை... ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். 

முதல்வராக சொன்னேன், பிரதமராக கேட்டார்.. மோடியை சந்தித்த பின் ஸ்டாலின் விளக்கம்

CM MK Stalin Met PM Narendra Modi : டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

TVK மாநாட்டில் பங்கேற்கும் ராகுல்காந்தி? போட்டுடைத்த ஜெகதீஷ்!

TVK Jagadeesh Exclusive Interview : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பக்தர்களின் மனது காயம்பட்டுள்ளது’.. ராகுல் காந்தி வேதனை!

இந்த ஆய்வறிக்கை உண்மை என்றால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது

’ராகுல் காந்தி நம்பர் ஒன் பயங்கரவாதி’.. மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு!

''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்திராவுக்கு நேர்ந்த கதிதான் ராகுலுக்குமா? - பதறிய மு.க.ஸ்டாலின்.. பாஜவுக்கு கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடும் வகையில் பேசிய பாஜகவினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மது விலக்கை உடனே செய்ய முடியாது.. அறிவுபூர்வமாக அணுக வேண்டும் - செல்வப்பெருந்தகை

மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

#BREAKING || அன்னபூர்ணா விவகாரம் - "அவமதிப்பு.." ராகுல்காந்தி விமர்சனம் | Kumudam News 24x7

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் ஜிஎஸ்டி சிக்கலை தீர்க்க கோரிய வியாபாரிக்கு அவமதிப்பு தான் மிச்சம் - ராகுல்

மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை

திருமாவளவன் நடத்தும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

'பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை'.. திடீரென பாச மழை பொழிந்த ராகுல் காந்தி!

''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர் உங்களை தாக்கி பேசுவார். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

'வெளிநாட்டில் இந்தியாவை மீண்டும் அவமானப்படுத்துவதா?'.. ராகுல் காந்தி மீது பாய்ந்த பாஜக!

''ராகுல் காந்தி போன்றவர்கள் நமது நாட்டின் உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வெளிநாட்டில் அவமதிப்பு செய்கின்றனர். நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நமது ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர்'' என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

'இந்தியாவில் வேலையின்மை பிரச்சனை.. சீனாவில் அப்படி இல்லை'.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!

''பலர் இந்தியர்களுக்கு திறமை இல்லை என்று கூறுகின்றனர். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் திறமைசாலிகளுக்கு இந்தியா மதிப்பு கொடுப்பதில்லை'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

"பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Selvaperunthagai : விஜய்யை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு; விஜயதரணி சொன்னதை கேட்கவில்லை - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது என்றும் நீண்ட காலத்திற்கு முன்புதான் சந்தித்தார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

'மிஸ் இந்தியா' பட்டியலில் ஏன் தலித் இல்லை? ராகுல் காந்தி கேள்வி.. மத்திய அமைச்சர் பதிலடி!

''மிஸ் இந்தியா போட்டியாளர்களை அரசு தேர்வு செய்யவில்லை. ஒலிம்பிக்கு விளையாட்டு வீரர்களையும் அரசு தேர்வு செய்வதில்லை. இதேபோல் திரைப்பட நடிகர், நடிகைகளையும் அரசு தேர்வு செய்வதில்லை என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.