திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.