K U M U D A M   N E W S

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.