K U M U D A M   N E W S
Advertisement

Court

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்ற சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று ஜாமின் மனுக்களை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   

RSS அணிவகுப்புக்கு அனுமதிக்க தாமதம் ஏன்..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

”குழந்தை ஆபாச படம் பார்த்தால்....” சென்னை உயர்நீதிமன்றத்துக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..வழக்கின் பின்னணி இதோ!

குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து னிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது  உச்ச நீதிமன்றம்.

“குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் Youtube பக்கம் ஹேக்.. உச்சக்கட்ட பதற்றம்!

SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்