K U M U D A M   N E W S

Chennai

Gold Price : உச்சத்தை அடையும் தங்கம் விலை..... நகை வாங்குறது கஷ்டம்தான் போலயே!

Gold Price Update in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chennai Airport : 10 விமானங்கள் திடீர் ரத்து.... அதிகாரிகள் அறிவிப்பு! பயணிகளின் நிலை என்ன?

10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட் சேர்ப்பு – தட்டிதூக்கிய போலீஸ் | Kumudam News 24x7

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ரஹீம், தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புத் தஹீரிக்கும் ஆதரவு திரட்டி ஆட்சேர்த்ததாக கைது.

Hi Box App Scam : ஆப் மூலம் ரூ. 500 கோடி சுருட்டல்.... சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி....

Hi Box App Scammer Arrest in Chennai : நாடு முழுவதும் 500 கோடி மோசடி செய்த hibox செயலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

#BREAKING | சென்னை மக்களே குட் நியூஸ்!! ரூ.63,246 கோடி.. Ok சொன்ன மத்திய அரசு

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit

வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit

#BREAKING || தண்ணீர் வசதி இல்லை; நோயாளிகள் அவதி

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகும் நோயாளிகள். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு. தண்ணீர் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாக குற்றச்சாட்டு

#BREAKING || திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

#BREAKING || நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல்

சென்னை அருகே போரூர் பகுதியில் நாடோடி இன பெண் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

14 மாவட்டங்களில் கனமழை - இந்த முறை மிஸ் ஆகாது எச்சரிக்கை ..!!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

#Justin || பாதுகாப்பு உபகரணமின்றி சுத்தம் செய்யும் பணி - பகீர் வீடியோ

சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் உள்ள கால்வாயை சுத்தம் செய்யும் பணி. கழிவுநீர் கால்வாயை எந்தவொரு பாதுகாப்பு உபகரணமின்று சுத்தம் செய்யும் அவலநிலை

#BREAKING: சர்ச்சை பேச்சு.. மகாவிஷ்ணு வழக்கில் புதிய திருப்பம்

அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசியதாக வழக்கு. வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ரயில் படிக்கட்டில் காலை நீட்டி பயணம்.. கால் துண்டாகி மரணித்த பரிதாப இளைஞர்

சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

நள்ளிரவில் நடந்த கோர விபத்து... உள்ளே இருந்த மூவரின் நிலை?

மின்தூக்கியின் பக்கவாட்டு சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு|

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போன் டவர் மீது ஏறி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை மிரட்டல்.

கோலாகலமாக தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதியில் வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கியது. ஏழுமலையான் கருட சேவைக்காக 11 திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டன.

இதனால் தான் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை - விளக்கமளித்த திருமாவளவன்

கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 1௦ மாவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்ணை பிளந்த சத்தம்.. அதிர்ந்த மெரினா.. வான் சாகச ஒத்திகை நிகழ்ச்சி

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

காந்தியை புறக்கணித்த திருமாவளவன்.. மது ஒழிப்பு மாநாடு அன்று சர்ச்சை

சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.

மீண்டும் மிண்டுமா? தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று மாபெரும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.