கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட இருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.