2 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! RBI வரம்பைத் தாண்டிய பணவீக்கம்.. தமிழ்நாடுதான் டாப்!
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7.29 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7.29 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.09% ஆக உயர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், RBI-யின் 6% வரம்பை மீறிய இந்த உயர்வுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்து, வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக இந்திய தொழில் முனைவோர் சங்க தேசியத் தலைவர் ரகுநாதன் எச்சரித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நெருங்கும் பொருளாதார புயல் ..! பாதிக்கப்பட போவது சாமானியனா..? | Rahul gandhi | Kumudam News
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி | Rupee | Dollor | Kumudam News
உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை.. | Kumudam News
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு..? | Breaking news | Kumudam news