K U M U D A M   N E W S

AI

யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் புகார்.. என்ன விஷயம்?

''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

GOAT Trailer: 'கோட்' டிரெய்லர்.. ஆக்சனில் தெறிக்க விடும் விஜய்.. பாராட்டிய அஜித்!

''கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற டிஜிபிக்கு முதல்முறையாக முக்கிய பதவி.. யார் இந்த சுனில் குமார்?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

18,000 பெண் ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம்.

அரசின் சொகுசு கார் இருந்தும் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் நெல்லை மேயர்.. அசந்து போகும் மக்கள்!

மேயராக பதவியேற்ற பிறகும் ராமகிருஷ்ணன் சைக்கிளை கைவிடவில்லை. தனது வார்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளில் செல்லும் அவர், தினம்தோறும் குப்பைகள் அள்ளப்படுகிறதா? குடிநீர் ஒழுங்காக வருகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்களிடம் கேட்டறிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

ஒரே நாளில் இரண்டு கொலை.. சென்னை கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்..

சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே நாளில் இரண்டு கொலை நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.. என்ன புகார்?

''பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்'' என்று சித்தராமையா கூறியுள்ளார்.

வறுமையால் குழந்தையை விற்ற பெற்றோர்.. வியாபாரம் நடந்தது அம்பலம்..

வியாசர்பாடியில் குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையை வைத்து வியாபாரம் நடந்தது அம்பலமாகி உள்ளது.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.