K U M U D A M   N E W S

AI

உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fake NCC Camp : கிருஷ்ணகிரி போலி NCC முகாம்.. “ஜாமின் கொடுக்காதீங்க..” - நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு வாதம்

Fake NCC Camp Issue in Krishnagiri : கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் தொடர் கைது... தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

MDMK Vaiko on Tamil Nadu Fishermen Arrest : தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

MUDA Scam : முடா முறைகேடு... நாளை அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு சித்தராமையா அழைப்பு

MUDA Land Curruption Case on Siddaramaiah : முடா முறைகேட்டில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்த நிலையில் நாளை அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்

ADMK Protest : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

AIADMK Women Wing Protest Against DMK : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் முழக்கமிட்டனர்.

Anbumani Ramadoss : “தொழிற்பயிற்றுநர்களை நியமிக்க நிதியில்லை... அரசு அலட்சியம்” - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Anbumani Ramadoss : மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசு பள்ளிகளில் தொழில்பயிற்றுநர்களை உடனே நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மகனுக்கு முடி சூட்டும் வேலைதான் நடைபெறுகிறது... ஜெயக்குமார் விமர்சனம்!

Jayakumar About Udhayanidhi Stalin : உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Rajaji Hospital : மதுரை அரசு மருத்துவமனை விபத்து.. அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madurai Rajaji Hospital Accident : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளே கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்தது. விசாரணையில் சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Kalaignar Kalaithurai Vithagar Award 2024 : மு.மேத்தா, பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு

Kalaignar Kalaithurai Vithagar Award 2024 : கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலைஞர்  நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

TN Rains Update : உக்கிரமடையும் மழை......7 மாவட்டங்களுக்கு அலர்ட்

Tamil Nadu Rain Update Today : தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.