கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.