K U M U D A M   N E W S

கமுதியில் கொட்டித்தீர்த்த கனமழை...வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது

மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு வீடியோ.. காவல்துறையை பாராட்டிய நீதிமன்றம்!

வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

நண்பனின் தங்கையிடம் ஆபாசமாக பேசிய யூடியூபர் இன்ஃபுளுயன்சருக்கு தர்ம அடி!

பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த உரிமை கோரியதால் நிறுத்தப்பட்ட கோவில் திருவிழா...பதற்றமான சூழலால் போலீஸ் குவிப்பு

புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

மாநில கல்லூரியில் போராட்டம்.. கெளரவ விரிவுரையாளர்கள் மீது வழக்கு பதிவு!

மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Gold atm: 30 நிமிஷத்தில் தங்கத்தை காசாக்கலாம்.. வந்தாச்சு புது ஏடிஎம்

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்கத்தை விற்கும் ஏடிஎம் மெஷின் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

98-வது ஆஸ்கர் விருது விழா.. வெளியான முக்கிய அப்டேட்!

98-வது ஆஸ்கர் விருது விழா கடந்த ஆண்டு 2026 மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் வரும், ஜனவரி 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமண நாளில் பிறந்த தேவதை.. விஷ்ணு விஷாலுக்கு குவியும் வாழ்த்து

நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.