மகா விஷ்ணுவுக்கு அனுமதி அளித்தது யார்? பரிந்துரைத்தது யார்? - வெளியான புதிய தகவல்கள்
அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Mahavishnu case update: அசோக் நகர் பள்ளியின் மேலாண்மை குழுவை சேர்ந்த காமாட்சி என்பவர் மூலமாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mahavishnu case update: மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Mahavishnu Case Update : மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
கட்சியின் நிலைப்பாட்டை மாநாட்டில் விஜய் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரசு பள்ளியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்
Mahavishnu Confession: தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Mahavishnu case update: மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் அவர்மீஇது மேலும் ஒரு வழக்குப்பதிவு.
Tamilisai Soundarrajan on Mahavishnu Issue: அரசு பள்ளியில் மத சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.
''அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம் மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?'' என்று சீமான் கூறியுள்ளார்.
மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.
அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.