K U M U D A M   N E W S

விசாரணை

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல்.. சீமான் மீதான வழக்கு விசாரணை தொடக்கம்

குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது

ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வருகிறது.

'பார்க்கிங்' பட பாணியில் சம்பவம்.. காரை நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே அடிதடி.. 6 பேர் கைது!

பெரு நகரங்களில் சாதாரணமாக நடக்கும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் உள்ளது என்பதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிகத் தெளிவாக காட்டியிருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.

Female Police Attack : பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்..அதிரடி காட்டிய போலீஸ்

Female Police Attack in Chennai : கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியவர்களை கலைந்து செல்லும்படி கூறிய பெண் காவலரை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு. 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வாயுக்கசிவால் மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்பட்டது ஏன்?.. சந்தேகம் எழுப்பும் அன்புமணி!

''கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

Nelson: நெல்சன் மனைவி குறித்த செய்திகளை நீக்க வேண்டும்... சட்டரீதியாக நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இயக்குநர் நெல்சனின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து 75 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள மோனிஷா, இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள்..

தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த சிலை கடத்தல் வழக்கு.. சிபிஐ வளையத்திற்குள் பொன் மாணிக்கவேல்...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து பல்வேறு சிலைகளை கண்டுபிடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற பாராட்டை பெற்ற ஓய்வு பெற்றவர் ஐஜி பொன் மாணிக்கவேல், மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கா?.. நியாயமான குரல்களை நசுக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.