K U M U D A M   N E W S

மத்திய இணையமைச்சர்

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

L Murugan: "வரலாறு காணாத ஊழல்.. திமுக ஆட்சியை தூக்கி எறியும் நாள்.." | DMK | BJP Protest | TASMAC

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்" - எல்.முருகன்

"தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்தி வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

"முதல்வர் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்புகிறார்" - எல். முருகன்

தமிழகத்திற்கு பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

குற்றத்தை மூடி மறைக்கும் திமுக.. நியாயம் கொடுப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்- எல்.முருகன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாதுகாப்பற்ற தமிழ்நாடு.. விழித்துக்கொள்ளுங்கள் முதல்வரே! - எல்.முருகன் கோரிக்கை

“மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்... மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வாயை திறக்காதவர்கள் தற்போது திறந்துள்ளனர்... திமுக என்கின்ற நரகாசுரனை ஒழிக்கணும்... எல்.முருகன்!

திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.