கனமழை எச்சரிக்கை எதிரொலி... பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
Heavy Rain Alert in Tamil Nadu : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் முழு கடையடைப்பு நடைபெறுவதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.
சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேனர் அகற்றப்பட்டதால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்தான விரிவான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.