K U M U D A M   N E W S

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடல் சீற்றம், மீனவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்திவைப்பு

இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்..!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அடங்காத இலங்கை கடற்படை; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.

'மீனவக் குடும்பங்கள் அச்சம்; நிரந்தர தீர்வு வேண்டும்'.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்