பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!
மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.