K U M U D A M   N E W S
Promotional Banner

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.