வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து அவர் தனது முதல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் மாநாட்டு பணிகளுக்காக கடுமையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜயின் கோட்பாடுக்கு விசிக-வினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, காங்சிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போ இணையத்தளத்த திறந்தாலே அங்க தவெக மாநாடும், தளபதி விஜய்யும் தான் டிரெண்டிங்கே. ஒரு மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு ஹைப்-னு நீங்க யோசிக்கலாம். ஆனா இதவிட பெரிய ஹைப் சோஷியல் மீடியா இல்லாத காலத்துலயே, அதாவது 2005லயே ஒரு மாநாட்டுக்கு இருந்துச்சு. வழக்கமா மாநாடுகள பெரிய அளவுல செய்ற அதிமுக, திமுக மாநாடு இல்ல. கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு திடீர்னு சொல்லி அதுக்கு ஒரு மாநாட்ட நடத்து கேப்டன் விஜயகாந்தோட மாநாடு தான் அது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், முக்கியமாக பார்க்கப்படுவது மாநாட்டு திடலில் வைக்கப்பட்டு இருக்கும் பிரமாண்ட கட்அவுட்கள் தான். கட்அவுட் நடுவில் விஐய் இருக்க அவரது வலதுபுறத்தில், தந்தை பெரியார், காமராஜர், வேலு நாச்சியார் இருக்க இடது புறத்தில் அம்பேத்கர், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களை அனைவரும் அறிந்திருக்க யார் இந்த அஞ்சலை அம்மாள்.... விஜய் மாநாட்டில் இவரின் கட்அவுட் வந்தது எப்படி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
சென்னை தேனாம்பேட்டையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தவெக தொண்டர் பலி. சிக்கனலை கவனிக்காமல் திரும்பிய போது இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது