கோவையில் ஜல்லிக்கட்டு.. 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!
கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.