K U M U D A M   N E W S

இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

IPL2025:10-வது தோல்வியை சந்தித்த CSK புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.. RR ஆறுதல் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

கலெக்டர் ஆபீஸ் வரவங்க இதை கட்டாயம் செய்யணும்...தென்காசி கலெக்டர் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு

பில்லியோ? புஸ்ஸியோ? TVK கூட்டணி குறித்து ஹெச்.ராஜா கமெண்ட்

”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மீண்டும் மீண்டுமா? நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா சிகிச்சை..!

நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவரும் நிலையில், தற்போது 257 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்: கைது செய்யப்பட்ட பேராசிரியர்.. கேள்விக்குள்ளாகும் கருத்துரிமை?

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கருத்துரிமை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனிடையே, பேராசிரியர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அரசியல் அமைப்பை பாதுகாக்க முன் வாருங்கள்.. 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

மசோதா கால நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தில் அரசியல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.