K U M U D A M   N E W S

சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என  சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்... போரட்டத்தில் குதித்த அதிமுகவினர்.. ஸ்தம்பித்த சாலை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜவுளி வியாபாரிகள் சாலை மறியல்.. ஈரோட்டில் பயங்கர பரபரப்பு

ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

”3 மாசமா தண்ணி வரல.. ” காலிக்குடங்களுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.