K U M U D A M   N E W S

கள

டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவு மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு.. வான் நோக்கி மூலம் கண்டுகளித்த மக்கள்

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு.

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை... தேவையான தகவல் அளிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து..!

பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது  திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6-வது அல்லது 7-வது சம்பள கமிஷன் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும்  அண்ணா பல்கலைக் கழகம்  அறிவித்துள்ளது. 

கல்குவாரிகளில் விதிமீறல்... கனிமவளத்துறை அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிகளில் 2வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில்... கும்ப கலசங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவு.. விரைவில் கும்பாபிஷேகம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தில் இருந்த 9 கும்ப கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் கோபுரத்தில் வைக்கப்பட்டது.

புழல் சிறை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு...!

தடை செய்யப்பட்ட செலஃபோன் , கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறை வளாகத்திற்குள் கண்டறியப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈஷா வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு

திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று (ஜன.20) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர். 

மருத்துவ கழிவுகள் விவகாரத்தில், ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கழிவுகள் சேகரிக்கும் ஒப்பந்த  நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.