K U M U D A M   N E W S
Promotional Banner

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.